வாழ்க தமிழர்கள் சாதியமே, சமயமே இன்னலே மீளா இருளே...
வாழ்க தமிழர்கள்
சாதியமே, சமயமே
இன்னலே மீளா இருளே
தலைமுறை கடந்தது கடந்துவிடு..
மனிதமே,மாண்பே
மின்னலே, மீளா ஒளியே
தலையோடு முறையாக அறிவெல்லாம் பதிந்துவிடு..
மொழியெல்லாம் வழியாக பயின்றுவிடு
தமிழொன்றே வாழ்வாக பழகிவிடு..
மேலென்றும் கீழென்றும் சாரங்கள் அழித்துவிடு..
மேல்நாடும் பின்பற்றும் மங்க(ள)லாச்சாரங்கள்
வளர்த்துவிடு..
வங்காளம் நடுங்கிவிட,
வருங்காலம் வியந்துவிழ,
பாரெங்கும் சிறந்திடவே,
மேரு மலை ஏறி நின்று
பேர் சொல்லும் தமிழினமே..
மார்சுரக்கும் பாலோடு தமிழ் குடித்து
விண்ணோடும் போர் முழங்கும்
வீரத்தின் விளை நிலமாம்
உலகத்தின் முதல் குடியாம்
தமிழ்குடி...
நம் குடி வாழ
நீ வாழ்ந்து
காலத்தால் அழியாது
காவலாய் நின்றுவிடு..