நடுவீதியில் இருவருக்குள் வாக்குவாதம் ! நீ உயர்ந்தவனா நான்...
நடுவீதியில் இருவருக்குள் வாக்குவாதம் !
நீ உயர்ந்தவனா
நான் உயர்ந்தவனா என்று .
நான் உயர்ந்தவனா என்று .
ஒருவர் கூறுகிறார் .....நாளும் என் மதிப்பு கூடுகிறது பார்த்தாயா என்று கூச்சலிட ,
மற்றொருவர்......சிறு இடைவெளி விட்டு கூடினாலும்
எனது மதிப்பு உன்னைவிட பன்மடங்கு கூடுகிறது என்று வாதிட்டார் .
அதை கவனித்தாயா என்று கர்வத்துடன் குரல் கொடுத்தார் .
எனது மதிப்பு உன்னைவிட பன்மடங்கு கூடுகிறது என்று வாதிட்டார் .
அதை கவனித்தாயா என்று கர்வத்துடன் குரல் கொடுத்தார் .
இதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு வழிப்போக்கர் இருவரையும் பார்த்து அடப்பாவிகளா ,நீங்கள் உங்கள் மதிப்பை எண்ணி நடுவீதியில் சண்டை போடுகிறீர்கள் .ஆனால் என்னைப் போன்றவர்கள் நடுவீதிக்கு வரவேண்டிய நிலையில் உள்ளோமே , உங்களை போன்றவர்களால் அதை பார்த்தீர்களா என்று ஆத்திரமாக , கோபத்துடன் கேட்டார் .
இன்னும் எப்படி எல்லாம் நாங்கள் கேவலமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்று தெரியவில்லை.
மற்ற இருவரும் தலை குனிந்து கொண்டார்கள் .
----------------------------------------------------------------------
----------------------------------------------------------------------
இதில் வந்த கதாப்பாத்திரங்கள் :-
முதலில் கத்தியவர் :பெட்ரோல்
இரண்டாவது நபர் : கேஸ் சிலிண்டர்
வழிப்போக்கர் : மக்கள்
இதுதான் இன்றைய நிலை .
பழனி குமார்
04.10.2018
04.10.2018