எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆகம மீறல் :--------- தெய்வச்சிலைகளுக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாக...

 ஆகம மீறல்  :---------


தெய்வச்சிலைகளுக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாக மாலைகளும் ஆடைகளும் அணிவிக்கலாம். அவற்றை உடனடியாக நீக்கிவிடவும் வேண்டும். நிரந்தரமாக தெய்வச்சிலைகளுக்கு கந்தலாடையைச் சுற்றி வைப்பது போல கீழ்மை வேறில்லை. நம் உளச்சிறுமை தெய்வங்களை பிச்சைக்காரர்களாக ஆக்கி வைத்திருக்கிறது.

தமிழகத்திற்கு வெளியே இப்பழக்கம் இல்லை. இங்கே சென்ற பத்தாண்டுகளாகத் தொடங்கிய இப்பழக்கம் இப்போது பெருகி கோயில்களே கந்தலாடைக் குவியலாக கண்ணுக்குபடுகின்றன. பெரும்பாலான ஆடைகள் பலமாதங்களாக அப்படியே விடப்பட்டு எண்ணையும் அழுக்கும் கலந்து செல்லரித்து காணப்படுகின்றன.  மாகாளைக்குக்கூட ஆடை அணிவிக்கிறார்கள். அம்மனுக்கு நாலாந்தர ஜிகினாத்துணியை போர்த்தி வைத்திருக்கிறார்கள்.

இதிலுள்ள அழகுக்குறைவு எவருக்கும் தெரியவில்லை. குறைந்தது வழிபாட்டு முறைமீறலாவது எவராலாவது எடுத்துச் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் இன்று ஆலயவழிபாடு உட்பட அனைத்தையுமே ஒன்றும்தெரியாத சவடால் சோதிடர்கள் முடிவெடுக்கிறார்கள்.

தெய்வச்சிலைகள்  நிர்வாணமாக நிற்பதாக இந்தப் பாமரர்களுக்கு நினைப்பு. சிற்பங்களிலேயே ஆடைகள் செதுக்கப்பட்டுள்ளன.அவை உரிய ஆகமமுறைப்படி செதுக்கப்பட்டவை. இன்ன சிலைக்கு இன்ன ஆடை என நெறிகள் உண்டு. ஆகவே சிலைகளுக்கு ஆடைகள் அணிவிக்கக்கூடாது, அது பாவம் என ஸ்தபதிகள் பலர் எழுதிவிட்டனர். வழிபாட்டுக்காக ஆடை அணிவித்தால் அதை நீக்கிவிடவேண்டும். [பட்டும் பருத்தியும் அன்றி வேறு ஆடைகள் அணிவிக்கக்கூடாது. ஆனால் இங்கே கண்ணுக்குப்படுபவை முழுக்க கண்கூசும் நாலாந்தர ஜிகினாத் துணிகள்] மலர்மாலைகள் கருகும் முன்னரே அகற்றிவிடவேண்டும். சில இடங்களில் மட்டும் சில சிலைகளுக்கு சந்தனம் முதலிய காப்புகளை மாறாமல் போடவேண்டும் என தொல்நெறி உள்ளது. அவை கடைபிடிக்கப்படவேண்டும். ஸ்தபதிகள் சொல்லுக்கெல்லாம் எவருக்கும் செவி இல்லை. அறிவுடையோரால் கைவிடப்பட்ட ஆலயங்கள் அறியாமையின் விளைநிலங்கள் இன்று.

நாள் : 25-Apr-19, 3:29 am

மேலே