எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடந்தவையும் நடந்தவையும் ஆவணங்களில் பதிந்தவையும் வருங்காலம் வாசிக்கவுள்ள வரலாற்றின்...

கடந்தவையும்
நடந்தவையும்
ஆவணங்களில்
பதிந்தவையும்
வருங்காலம்
வாசிக்கவுள்ள
வரலாற்றின்
பக்கங்கள்...

நடைபெறும்
நிகழ்வுகள்
நாளிதழின்
தகவல்கள்
தொகுத்திடும்
செய்திகள்
தொடரும்
தலைமுறைக்கு
அறிவுப் பெட்டகம்
ஆய்வுக் களஞ்சியம் ...

இறந்தக் காலமும்
அறியாமல்
நிகழ் காலமும்
புரியாமல்
எதிர்காலத்தை
எண்ணாமல்
பொழுதைப்
போக்கிடும்
பொறுப்பற்ற
இளைய சமுதாயம்
இனியாவது
சிந்திக்க வேண்டும்
சரியான முறையில்
செயலாற்ற வேண்டும்
பகுத்தறிவால்
வகுத்துணர்ந்து
வாழ்வியல்
நியதிகளுடன்
நெறிதவறா
வாழ்க்கை
வாழ்தல் வேண்டும் !

பழனி குமார்
10.08.2019

நாள் : 11-Aug-19, 7:13 am

மேலே