எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை ,...

சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் அந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்கவில்லை , ஆனால் அதை சுவாசிக்கும் நாம் ,
அதன் பலனை அனுபவிக்கும் நாம் , 
அதனால் பயன் பெற்ற நாம் ,

நாளும் நமக்குள் போராடுகிறோம் ,
சாதி மதங்களுக்காக ,
அரசியல் காரணங்களுக்காக ,
பேராசை , சூழ்ச்சி , பொறாமை, போட்டி 
எனும் இழிவான எண்ணங்களுடன் , 
அறிவாயுதத்தைக் கூர்மழுங்க செய்து 
அன்பு , பண்பு , பாசம் , நேசம் 
ஆகியவற்றைக் கைவிட்டு , 
ஒற்றுமையை அடியோடு ஒழித்து , 
மொழி , இனம் கலாச்சாரத்தை மறந்து ,
அந்நியமோகம் எனும் ஆழ்கிணற்றில் விழுந்து ,
புதுமை , புதுயுகம் என்று கூறிக்கொண்டு 
பழமையை மறந்து , பகையை வளர்த்து , 
இயற்கை வளங்களை அழித்து , 
செயற்கையாக வாழ்ந்து வரும் இந்த சமுதாயம் 
பொய்யயையும் போலியையும் நம்பி , 
கற்பனை வாழ்வை நடத்திடும் நாம் , 
சுயஅறிவுடன் சிந்தித்து செயலாற்றுவது 
நமது கடமை மட்டுமல்ல ,சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களுக்கும் தியாகிகளுக்கும் நாம் செய்கின்ற கைம்மாறு ஆகும் என்பதை உணர வேண்டும் .வாழ்க தாய்த்திரு நாடு , வளர்க ஒற்றுமை !சுதந்திர தின நல்வாழ்த்துகள் !


பழனி குமார் 
15.08.2019

நாள் : 15-Aug-19, 4:48 pm

மேலே