எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடந்த இரண்டு நாட்களாக சிறுவன் சுர்ஜித்தின் நிலைக் கண்டு...

கடந்த இரண்டு நாட்களாக சிறுவன் சுர்ஜித்தின் நிலைக் கண்டு நெஞ்சம் பதறியது . உள்ளம் உறைந்தது . விழிகள் நிரம்பி வழிந்துக் கொண்டிருந்தன . ஆனால் இறுதியில் அவனை மீட்பதில் தோல்விதான் கிடைத்தது . அனைத்து இதயங்களும் சோகத்தில் மூழ்கின .அரும்பு ஒன்று மலர்வதற்குள் உதிர்ந்துவிட்டது .
இரும்பு மனங்களும் உருகியது வருத்தத்தின் மிகுதியால் .



இறையாண்மையைப் பற்றிப் பேசுபவர்கள் , நமது இயலாமையை இனியேனும் உணருங்கள் !விதிவிதியென்றுக் கூவிக்கூவித் திரிபவர்கள், விதிமுறை அறிந்து செயல்படுங்கள் !முயற்சி செய்தோரை பழித்துக் கூறவில்லை, முன்னேறிய அறிவியலை கற்றிட முற்படுங்கள் !ஒரு பிஞ்சு உள்ளத்தைக்கூட காப்பாற்ற முடியாத நிலை நம்மால் . பணம் மட்டும் கொடுத்து அந்தக் குடும்பத்தின் இழப்பை ஈடுகட்ட முடியாது என்பதை அரசும் , அதிகாரிகளும் , மக்களும் உணர் வேண்டும்.


இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் , நிகழும் எதிர்பாராத விபத்துகள் அனைவருக்கும் ஒரு பாடம் கற்பிக்கிறது என்பதை மறந்திடல் கூடாது .ஆனால் மீட்பு பணியும் , பின்பு ஏற்பட்ட தொய்வும் , நேரடி காட்சிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இறந்தசெய்தியை அறிவித்த ஊடகங்கள் மீது ஓர் சந்தேகமும் உண்டாக்குகிறது . அரசியல் காரணமா அல்லது ஏதாவது நிர்பந்தமா ? அதுமட்டுமின்றி சரியாக திம்மிடவும் இல்லை என்பதுஎனது கருத்து. 


விடைகள் தெரியா பலவித வினாக்கள் இன்னும் எழுகிறது எனது நெஞ்சில் என்பதை பதிவு செய்திட விழைகிறேன் .மீட்புப்பணியில் ஈடுபட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.


ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் , பேரிழப்பின் காரணமாக தாங்க இயலாத வலியால் துடிக்கும் சுர்ஜித்தின் குடும்பத்தினருக்கு 


பழனி குமார்
29.10.2019

நாள் : 29-Oct-19, 10:36 pm

மேலே