எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகளும் ஓர் தாய் ஞாயிறு தூங்கும் அழகிய தருணம்...

 மகளும் ஓர் தாய்ஞாயிறு தூங்கும்

ஞாயிறு தூங்கும் அழகிய தருணம்
முழு வார எதிர்நோக்களின் ஆசை இவ்வோர் நாளில்
அடைந்த களிப்பில் வந்த களைப்பில்
தங்கள் கூடு நோக்கி பறக்கும் மக்கள்
கடலன்னை தனக்கென்ற தென்றலை
அலைகளுடன் கறை தள்ளிக்கொண்டிருந்தாள்
அலை இசையினிடையே தன் மூச்சுக்காற்றை
இசையென மாற்றி பசி நீங்க துண்டேந்தினான்
பேதையைத் தோளிலேந்திய தந்தை
ஆழலை ஓசை மட்டும் போதுமென்ற
நோக்கில் அவனிசை கடந்தனர் மக்கள்
பசியின் நேரமுணர்ந்த தந்தையாய்
பேதை பசி நீக்க தன் சட்டை பையில்
கை விட்டவனிடம் சிக்கியதோ பத்து ரூபாய்
பத்தாத பத்தில் மகளின் பசியாற்ற
மெதுரொட்டியும் பாலுமே கிடைத்தது
இரண்டையும் மகளுக்கே அளித்து
தன் பசியாற நீரருந்தி அமர்ந்தான்
தன் வண்ணக் கைகளில் ரொட்டியை
அழகாய் பிய்த்தெடத்து பாலில் தோய்த்து
தன் தந்தையின் பசி நீங்க 
பிஞ்சுக்கரத்தால் ஊட்டினால் அன்னையென
அடம்பிடிக்கும் குழந்தையென தலையாட்ட 
அவனைச் செல்ல அதட்டலுடனே
வாயினில் தினித்துவிட்டாள் தாயாய்
தன் முன்னே அன்னையைக் கண்ட ஆனந்தத்தில்
கண்ணீர் மல்கி வாரியனைத்தான் தன் தாயை


மகளும் ஓர் தாய்ஞாயிறு தூங்கும்

பதிவு : அன்னமுரளி
நாள் : 25-Feb-20, 7:13 am

மேலே