" சொல்லேருழவர் தினம் " பிள்ளை பிராயத்தின் வசந்த...
" சொல்லேருழவர் தினம் "
பிள்ளை பிராயத்தின் வசந்த நினைவுகளாய்🤔🤔
வகுப்பறையின் நுழைவாயிலில் இருபுறத்தில் உட்புறம் சுமையாய் இருந்தது வெளிப்புறம் சுகமாய் இருந்தது..
உந்தன் வருகையைக் கண்டால் அச்சத்தில் உள்மனம் படபடக்கும்..
உந்தன் கரப்பிடியில் கட்டுண்ட பிரம்பைக் கண்டால் கடும் சுரமும் தொத்திக்கொள்ளும்..
விளையாட்டுப் பாடவேளையென்றால் மனம் விடுமுறையாய் பூரிப்படையும்...
நீயுரைத்த அறிவுரையில் எந்தன் செவியேறிய வார்த்தைகள் சிலவே...
வார்த்தை குறைவென்றாலும் அதன் வலிமை குறையவில்லை...
நான் தவறிழைத்ததால் தண்டனையென்று கால்கடுக்க நிற்கவைத்தாய் வகுப்பறைக்கு வெளியே...
எந்தன் தவறை நானுணரவோ தவறிழைக்காமலேயே தண்டணையேற்றாய் வகுப்பறைக்கு உள்ளே...
வாழ்வின் பாடத்தை அன்றே வகுப்பறையில் எடுத்துரைத்தாய்..
எதுவும் நம் கையில் இருக்கும் போது அதன் மதிப்பு தெரிவதில்லை...
அதனைவிட்டு நீங்கும் போது தான் அதன் மகத்துவம் புரியுமென்று...
அன்று நீர் கற்பித்த
"கல்வி தரத்தின்" பிரதிபளிப்பு ...
இன்று ஒருசிலரைக் கண்டால் சிரம் தாழ்த்தி சலிப்புடன் செல்ல வைக்கிறது...
இன்னும் ஒருசிலரைக் கண்டால் சிரம் நிமிர்ந்து பண்புடன் பணியவைக்கிறது..
உந்தன் பிரம்படி தான் எந்தன் பிற்கால வாழ்வின் அடித்தளம் என்பதை பிறகுணர்ந்தேன்...
என்றும் ஓர் மாணவனாய் எந்தன் ஆசான்களுக்கு சொல்லேருழவர் தின வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.....💐💐💐💐💐