எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பன்னீர் பூக்கள் வெண் சங்கு நிறத்தவளே! நட்சத்திரம் போன்றவளே!...

பன்னீர் பூக்கள்

வெண் சங்கு நிறத்தவளே!

நட்சத்திரம் போன்றவளே!

குழல்காம்பு கொண்டவளே

இரவினிலே மலர்பவளே!

ஊர் முழுவதும் உன் வாசம்

உனைத்தேடி வண்டு வரும்

மரத்தினிலே மலர்வதால்

மரமல்லி ஆனாயே!

பூக்களை உதிர்த்து

பூமெத்தை விரித்து

பூமித்தாயை அழகூட்டுகிறாயே?

பதிவு : ஜோதிமோகன்
நாள் : 28-Apr-21, 11:01 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே