உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...? மிக எளிமையான கேள்வி...
உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...? மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!
ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.
திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து பக்கத்து கடை காரர் வந்து இந்த 1000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டு என்று சொல்லி குடுத்து விட்டு 1000 ரூபாய் வாங்கி செல்கிறார்.
இப்போ இந்த கடை காரருக்கு எவ்வளவு நஷ்டம் ?
----------------------------------------------------------------------------------------------
நன்றி : கிரியேட்டிவிட்டி/முகநூல்