காலத்தின் வழியில் நாம் செல்கிறோமா காலம் நம்மை வழிநடத்துகிறதா...
காலத்தின் வழியில்
நாம் செல்கிறோமா
காலம் நம்மை
வழிநடத்துகிறதா
என்று தெரியவில்லை..
நடப்பது எல்லாம்
விதியெனக் கூறுவது
வாடிக்கை பலருக்கு..
நடப்பவை எதுவாகினும்
தன் வழியில் சென்று
கடந்து செல்கின்றனர்
கவலையின்றி சிலர்...
இன்று வாழ்கிறோம்
நாளை அறியோம் !
உள்ளத்தில் உறுதியுடன்
நெஞ்சில் துணிவுடன்
எதையும் எதிர்கொண்டு
எதிலும் வெற்றி காண்போம் !
பழனி குமார் 20.10.2021