தனிமைக்கு என் மேல் காதல் வந்துவிட்டது அதனால் யாரையும்...
தனிமைக்கு என் மேல் காதல் வந்துவிட்டது
அதனால் யாரையும் என்னை நெருங்க விடவில்லை
நான் தனிமையை வெருக்காத நாளில்லை
அதன் அழகையும் ஆழத்தையும் தெரியும் முன் வரை
நண்பர்கள் இருந்தும் மணிக்கணக்கில் உரையாட பிடிக்கவில்லை
அலைபேசி இருந்தும் அதை பார்க்க பிடிக்கவில்லை
காதலி இருந்தும் அவளுடன் கொஞ்சி பேச பிடிக்கவில்லை
பிடித்த பாடலை காதணிகள் மூலம் கேட்க பிடிக்கிறது
உன்னால் என்னிடம் நான் தொலைந்ததை மீட்டெடுத்தேன்
உன்னால் நான் முடிவுகளை சரியாக எடுத்தேன்
யாரும் என்னை நம்பாத போதும் நீ என்னை நம்பினாய்
உன்னால் தான் நான் என்னையே காதலிக்கக் கற்றுக்கொண்டேன்
சிலருக்கு துயரமாக தெரியும் நீ பலருக்கு பிடித்த ஒன்றாகத்தான் இருக்கின்றாய்...