எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரஜினியின் லிங்கா படபிடிப்பு நிறுத்தம் : குடிநீர் ஏரியில்...

ரஜினியின் லிங்கா படபிடிப்பு நிறுத்தம் : குடிநீர் ஏரியில் கெமிக்கல் கலந்ததால் பரபரப்பு

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா மற்றும் பலர் நடிக்கும் 'லிங்கா' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டிக்கு அருகில் உள்ள அனஜ்பூர் என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குள்ள ஒரு ஏரியில் சில கெமிக்கல்களை படக்குழுவினர் கலந்ததால் அவர்களுக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியுற்ற படக்குழுவினர் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தினர்.

அந்த ஏரிதான் அந்த மக்களின் குடிநீர் ஆதாரமாம். படப்பிடிப்புக்காக அதில் கெமிக்கல்களை கலந்து படக்குழுவினர் அசுத்தப்படுத்தியதால்தான் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், படக்குழுவினரோ அங்கு படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெற்றதாக தெரிவித்துள்ளனர். அதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பின் ரஜினிகாந்த் தலையிட்டு கிராம மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கமாறு படக்குழுவினரைக் கேட்டுக் கொண்டாராம். தொடர்ந்து கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர்கள் சம்மதித்தால் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் இல்லையென்றால் ஐதராபாத்தில் உள்ள அன்னபூரணா ஸ்டுடியோவுக்கு மாற்றப்படும் என்றும் தெரிகிறது.

'லிங்கா' படத்தின் கதையே, தண்ணீர் பிரச்னையை மையமாக வைத்துத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க கிராம மக்களின் குடிநீர் ஆதாரத்திலேயே அவர்கள் பிரச்னை செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள் : 4-Jul-14, 4:58 pm

மேலே