விவசாயி

எத்தனை காலமாய்
தவமிருக்கிறேன்....
என் காணிநிலத்தினில்
உன்போல் பட்சிகளின்
பசியாறி பறந்திடும்
அழகினை காண....
இறைவனுக்கும்
இரக்கமில்லையே...
என் இமைகளின் அழுகையை
தடுத்திடும் எண்ணமில்லை...
காணிநிலமிங்கே
காயுதடா....
கடன்காரனுக்கும் கண்
உருத்துதடா
என் உள்ளத்தின்
ஒற்றைக்கால்
தவத்தினை கலைத்திடவே
கைகள் நீளுதடா.....

நாள் : 15-Jan-18, 11:15 am

ஆதி இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே