பருவம்

மலரின் மென்மையாய் பெண்ணைப்
படைத்தான்...
ஏழ்வகைப் பருவத்தில் அழகாய்
விதைத்தான்...
கருவில் உதிர்ந்து கைகளில் தவழ்ந்து
ஐந்து முதல் ஏழாண்டு
பேதையென்றான்......


ஏழுமுதல் பதினொன்றில் புரியாதப்
புதிர்களோடு
துள்ளித் திரிவதை
பெதும்பையென்றுப் பெயரிட்டான்...
பன்னிரண்டில் பதிமூன்றில்
மங்கையாய் மெருகேற்றி
பட்டாம் பூச்சிகளாய் பறக்க
விட்டான்......


பதினான்கில் துளிர்த்து பத்தொன்பது
வரையில்
காதல் உணர்வுகள் கசிந்து
பெருகிடும்...
காமத்தில் அலையும் கழுகிடம்
வீழ்ந்திடும்...
மாயங்கள் நிறைந்தது மடந்தையின்
பருவமென்றான்......


இருபதில் அடியெடுத்து
இருபத்தைந்தில் பெற்றெடுத்து
தாய்மை அடையும் பெண்ணோ?...
அரிவையென்றும்
தான்செய்த வினையின் பலனை
அனுபவிக்கும்
மூப்பின்முன் முப்பத்தொன்று
தெரிவையென்றும் விளம்பினான்......


நினைவுகளை கனவுகளாய்
சுமந்திடும் நாற்பதோ?...
வாழ்க்கைப் பயணத்தின் பேரிளம்பெண்
என்றானே...
அரும்பு முதல் செம்மல் வரை
மாலையில் கோர்த்து பெண்ணெனத்
தந்தானே......

இதயம் விஜய் இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே