ஆதாம் தொடங்கிய காதலின் பரிணாம வளர்ச்சி....!!!

இதற்கு தானா இவ்வளவு காலம்
காத்திருந்தது காதல்..!!

ஆதாமின் பாவப்பட்ட காதல் தொடங்கி
ஆதிவாசியின் இனம்புரியா காதல் கடந்து,
கருப்பு வெள்ளை காவிய காதல் தொலைந்து
மானே தேனே பொன்மானே என
காதலின் பரிணாமம் வளர்ந்தது..!!

குற்றம் என சொல்லியும்
உணர்வுகளை கடந்து உயிர் பரிமாறி
பூமியில் காதல் விதைத்தது
ஆதாமின் காதல்..!!

பேச மொழியின்றி பார்வையிலும்,
சொல்ல வழியின்றி கை சைகையிலும்,
அதிசயமாய் காதல் சொன்னது
ஆதிவாசியின் காதல்..!!

கண்மூடி கவிதை பாடி,
கனவில் சொர்க்கம் புகுந்து,
குழந்தை தோற்க ஓடி விளையாடி
காவியமாய் காதல் செய்தது
கருப்பு வெள்ளை சினிமா காதல்..!!

உயிர் உருக காதலித்து,
நீயில்லை எனில் நானில்லை என்று
காதல் தோல்விக்கு தன்னை
அழித்து கொண்டு காதல் வளர்த்தது
கடந்த கால காதல்...!!!

எல்லாம் பார்த்த இந்த காதலின்
இப்போதைய புதிய பிறப்பு,
தனக்கு கிடைக்காத காதலை
அழிக்க துணிந்து காதல் புகுத்தும்
அபூர்வமான கொடூர காதல்..!!

இன்னும் எதையெல்லாம் பார்க்க
காத்திருக்கிறதோ
இந்த அழிக்க முடியா காதல்...!!

எழுதியவர் : மனோ ரெட் (14-Jun-13, 4:53 pm)
சேர்த்தது : மனோ ரெட்
பார்வை : 98

மேலே