விண்ணை தாண்டி வருவேனே...!!!!
காதல் மேகம் கனவில் வருகிறது,
மழையாய் பொழிந்து கனவை கலைத்தது,
யாரும் இல்லாத தனிமையை
திருடி போனது,
என்னை யாரென என்னிடம்
கேட்க சொல்கிறது..??
எப்படியோ இருந்த நான்
இப்படி மாறிவிட்டேன்..!!
போகும் பாதையின் வழி மறந்தேன்,
ஓரிடம் செல்ல வேறிடம் சென்றேன்,
நின்று கொண்டே மிதிவண்டி ஓட்டினேன்,
திடிரென கண் கலங்கினேன்,
தீயை கையில் அணைத்தேன்,
நரம்புகள் கிழித்து
உன் பெயர் எழுதினேன்,
என்னமோ இழந்தேன்,
என்னையே மறந்தேன்...!!!
வீணாக திரிந்த நான்
விஞ்ஞானி ஆகிவிட்டேன்..!!
மொட்டை மாடி நிலவை எண்ணினேன்,
மின்சார விளக்கை அணைத்து அணைத்து
எரிய செய்தேன்,
என் கண்ணீரில் கப்பல் விட்டேன்,
கவிதை எழுதி காகிதம் அழித்தேன்,
என் ரத்த நிறம் தெரிந்து கொள்ள
உன் உருவம் பச்சை குத்தினேன்,
எதற்கோ தவித்தேன்,
என்னையே அழித்தேன்..!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
