தரை மேல் பிறக்க வைத்தான்...!!!

எங்கேயோ வேடிக்கை பார்க்கிறான்,
நம்மை பூமிக்கு அனுப்பி வைத்த
இறைவன்..!!!
நம்மை பார்த்தால் அவனுக்கு
எப்படி தெரிகிறதோ...???
தலையாட்டும் பொம்மையா,
இல்லை,
சொல்வதெல்லாம் செய்யும் எந்திரமா..??
படைத்தது அவன் தான் என
எல்லோர் நெஞ்சிலும் புகுந்து
நம்ப வைத்து விட்டான்..!!
அது போகட்டும்,
எதற்காக படைக்கிறான்
என்று இதுவரை யாரிடமாவது
இறைவன் கூறியது உண்டா..??
அவர் விருப்பத்தில் நம்மை படைப்பாராம்,
வாழ்க்கையையும் வாடகைக்கு கொடுப்பாராம்,
இன்பம் வந்தால் துன்பம் வரும்,
நல்லது நடந்தால் கெட்டதும்
கேட்காமலே நடக்கும் என்பாராம்...!!
கோவம் வருவதும் நியாயம் என்றால்
முதல் கோவம் இறைவன் மேலே தான்..!!
இத்தனை கோமாளிகளை படைத்த
இறைவன் தான் பெரிய கோமாளி..!!
தரை மேல் பிறக்க வைத்த அவன்
பொறுப்புகளை சுமக்க வைத்தான்,
சிரிப்பிலும் சிந்திக்க வைத்து
சுகத்திலும் சோகம் தந்தான்..!!
அவனை நினைத்தால் எதுவும்
இனிக்கவில்லை,
நமக்காக என்ன கிழித்துவிட்டான்
என கேட்கவும் துணிவில்லை..!!
மக்களை படைத்தது நான் தான் என
இறைவன் உரிமையுடன் சொன்னால்,
அவனை அடிப்பதற்கும்,
கேள்வி கேட்பதற்கும்,
நம் தாய் தந்தை அவன் என்ற முறையில்
நமக்கும் உரிமை இருக்கிறது ..!!!