கடைசி பென்ஞ்ச்

வயிறு வலி, வகுப்பில் கவனம் இல்லை
கடைசி பென்ஞ்சில் உட்கார்ந்தேன் அன்று மட்டும்.
வாத்தியார் பின்னாலிருந்து முன் செல்பவர்களை பார்த்திருக்கிறேன்
முன்னாலிருந்து பின் செல்பவர்களை ! உம் .
அவர் பார்வையில் நான் படிக்காதவன்
அன்று என்னால் படிக்க இயலவில்லை
அன்று என்மேல் கவனம் அவருக்கு
ஒருமாதம் ஆனபின்பும் என்னையே குறிவைத்தார்.
ஒரு நாள் வகுப்பில் யாருக்காவது
கலெக்டர் ஆக விருப்பம் இருக்கிறதா
நான் கைதூக்கினேன் அதற்கு அவர்
யார் வேண்டுமானலும் ஆசைபடலாம்!
என்னை பார்த்து ஒரு நய்யாண்டி சிரிப்பு
அன்றுதான் எனக்கு புரிந்தது
கடைசி பென்ஞ்ச் படிக்காதவர்களுக்குரிய
பென்ஞ்ச் அல்ல படிக்காமல்
ஆக்கப்பட்டவர்களுக்குரிய பென்ஞ்ச் என்று
பல கனவுகளுடன் கல்லூரியில்
காலடி எடுத்து வைத்த மாணவனுக்கு
பரிசு அவமானம்,அலட்சியம் அவன் மேல்,நக்கல்,கேளிக்கை
கடைசி பென்ஞ்சில் ஒருநாள் உட்கார்ந்த பாவத்தால்!

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (27-Oct-13, 5:48 am)
பார்வை : 87

மேலே