குடியிலும் சிறப்பு குடியே

மாதை ருசியான் மது ஏந்தல் வியப்பல்ல
மனையாள் முறையீடும் அதனில் அவசியம்
இரவானால் அவகுக்கு இனிதாகும் மது
பின் எப்படிக்கனியாவாள் மாது
நற்குடியில் அவன் பிறவாமை அவன் செய்த தீதல்ல
பெரும் குடியில் அவன் வீழ்தல் பிறர் செய்யும் பிழையல்ல

நன்மை தீது பகுத்தறிந்து நன்று நடப்பதற்க்கன்றேல்
பிறகெதற்கு அறிவில் ஆறாம் அறிவு

வள்ளுவனும் வல்லவனும் வகுத்து வைத்த
கட்டளைகள் அறிவுரைகள் இன்னுமும் சாகவில்லை
இருந்துமவன் வாழ மறுக்கவுமில்லை

மானுனமுன்டேல் இன்றே அவன் மடிதல் நன்று
குடி கொண்டு அதனில் குடியிழந்து வாழ்தலை விட .

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (27-Oct-13, 4:28 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 64

மேலே