வித்திடுவோம்

சின்ன சின்ன குரும்புதனை
சித்திரகை எழுத்துதனை
கள்ளம் கபடமில்லா
தும்பைபூ சிரிப்புதனை
வாடாமல் ரசித்திருப்போம் !!!

கருவில் சுமந்த தாயைப்போல
நெஞ்சு குழியினில்
நினைவுகளை
தேக்கி வைத்திருப்போம் !!!

ஆண்டுதோறும்
ஆயிரமாயிரம் அரும்புகளை
அணியணியாக மலரசெய்வோம்!!!

சாதி ,இனம் ,மதம்தனை
விட்டொழிய செய்து
பார்ப்பதில்லை பேதம்
ஆண்பெண்ணென்று
எனும் வாக்குதனை
மொழியசெய்வோம்!!
வழுக்குகின்ற நிலத்தில்
ஊன்று கோலாகி,
இன்னல்களை நீக்கும்
விவேகத்தை போதித்து
வெற்றிக்கு வித்திடுவோம் !!!

காப்பியங்களையும் காவியங்களையும்
சரித்திர நிகழ்வுகளையும்
இன்னபிற கதைகளையும்
கனிவுடன் பகிர்ந்திடுவோம் !!!

கல்லாமை எனும்
காரிருளை போக்கி
ஓளிநிறைந்த நிலவாக
பாரினில்
உலாவர
செய்வோம் !!!

வானவர்களுக்கு நிகராக
வாடாத மாலைகளாக
வானுயர செய்து
வாழ்விற்கு வளம் சேர்ப்போம் !!!

கற்றல் இன்பம் தரும்
ஒற்றுமையே பலம் தரும்
தனிமரம் தோப்பாகாது
நானிலத்தில் வாய்மையே
ஜெயத்தினை வாழ்வில்
சேர்க்கும் எனும்
நன்னெறிகளை நயத்துடன்
போதிப்போம் !!!

அன்பைகொடுத்து
அறிவைகொடுத்து
பண்பைவளர்த்து
யோசிக்கவைத்து
நேசிக்கவைத்து
நேசகரம்தனை நீட்ட
செய்வோம்!!!!

சின்னசின்ன
குற்றம்தனை களைந்து
தொடுக்கும் கணைகளுக்கு
தொய்வில்லாமல்
புன்சிரிப்புடன்
அறிவொளிதனை
ஏற்றிடுவோம்

நல்ஒழுக்கத்தினை
ஆருயிர்போலே
காத்திட வேண்டும் என்ற
ஆழ்ந்தகருத்தினை
ஆழ்மனதில் பதித்திடுவோம் !!

வானில் உள்ள
ஓவ்வொரு கோளையும்
எட்டிபிடிக்கவே செய்து
இணையற்ற செங்கதிரோனாய்
இம்மண்ணில்
வலம்வர ஏகுவோம் !!!

எழுதியவர் : umamaheshwari kannan (27-Oct-13, 12:25 am)
Tanglish : viththiduvom
பார்வை : 85

மேலே