பசுமை

மழை சோவென்று அடித்து ஓய்ந்தது...மணி 5 ஆகியும் அவனைக் காணவில்லை நான் நான்கரை மணிக்கே வீடு வந்திட்டேன்..ஆமா . நான் வீட்டுக்கு பக்கத்து ஸ்கூல் ....அவன் இங்கே எட்டாம் கிளாஸ் முடிச்சிட்டு இப்ப பத்தல்லவா படிக்கிறான் ....சுசீந்திரத்தில இருக்கு அவன் ஸ்கூல் ....அங்கிருந்து வரணுமில்ல..மழை வேற பெய்யுது....4 மணிக்கு பள்ளி விட்டுவிடாங்க..எப்படியும் வந்திடுவான் மனது அலைபாய்ந்து கொண்டிருந்தது...சாலையில் பக்கத்து வீட்டு ராசப்பன் அண்ணாச்சி குடை பிடித்துக் கொண்டு கிருஷ்ணன் கடைக்கு போயிட்டிருக்காரு....டீ சாப்பிட...ஸ்கூல் விட்டு வந்தவுடன் என்னதான் பார்க்க வருவான்..அவனும் நானும் அவ்வளவு நட்பு ......வேற யார்கூடயும் சுற்ற மாட்டான்....எல்லாமே என்கூடதான். இன்னைக்கு நாங்க ஒரு பிளான் பண்ணி வச்சிருக்கிறோம் . இன்றைக்கு எப்படியாவது அதைப் பார்த்திடனும்...அப்படி அதில்ல என்னதான் இருக்கு....இதுக்காகவே காலையில அண்ணன் தந்த 5 பைசாவையும் கடலை மிட்டாய் வாங்காமல் பத்திரமாக வைத்துக் கொண்டேன்...ஏற்கனவே என்கிட்ட இருந்த 20 பைசாவையும் சேர்த்து மொத்தம் 25 பைசா இருக்குது ......அது வாங்க அது போதும்...மனசு புது அனுபவத்தை அனுபவிக்க போற நினைப்பில் நிலை கொள்ளாமல் தவித்தது.......
ஏலே...... .
எதிரில் .ரமேஷ் நின்றிந்தான்.....வந்துட்டீயா..உனக்காகத்தான் காத்து கிட்டிருந்தேன்.....போகலாமா.......
மழைலே ..அதான் நேரமாச்சி .....
பைசா இருக்கா.....
இருக்கு....25 பைசா இருக்கு போதுமில்லா ...
போதும்...
இருவரும் தானப்பண்ணன் கடைக்கு போனோம்......அங்க போய்தான் அத வாங்கினோம் ...அதான் சிகரெட்டு....முதன்முதலா அடிச்சி பார்க்க ப்ளான் .
..அண்ணே ....1 கோல்ட் ப்ளாக் சிகரெட்டு கொடுங்க ...
..ஏலே என்ன சிகட்டு குடிக்க ஆரம்பிச்சாச்சா..
..உங்க அப்பா வந்தா சொல்றேன்.....
..அதெல்லாம் ஒன்னுமில்லன்னே ..ஒரேஒரு தடவை அடிச்சி பாக்கலாமேன்னு...அப்பாகிட்ட்ட சொல்லிராதீங்க...
சிகரெட்டை வாங்கி பையுக்குள் வைத்துக் கொண்டு....
2 குச்சியும் காலி தீப்பெட்டியும் வாங்கிகொண்டு பவ்யமாக இருவரும் நடந்தோம் .....

மழை காரணமாக தெற்கு பக்கம் வயக்கரை பக்கம் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது....மெல்ல இருட்டு கவியத் தொடங்கியது.....வயக்கரை பக்கமாக மெல்ல நடந்தோம்....வயலில் கதிர் வந்த பயிர்கள் மலையில் நனைந்து புதுப்பெண் போல் தலை குவிந்து கிடந்தது.....அந்த அழகை ரசித்துக் கொண்டே கால்கள் நடந்தன .சிகரெட்டையெடுத்து ரமேஷிடம் கொடுத்தேன்....அவன் அதை பற்ற வைத்து புகையை உள்ளிழுத்தான்.....அடுத்து என்கிட்ட கொடுத்தான்....நானும் புகையை உள்ளிழுத்து நாசி வழியே வெளியிட்டேன்...பிரமாதமாக இருந்திச்சி .தலை லேசாக சுற்றுவது போலிருந்தது.
..எலா இதில போதை லாம் இருக்கா...
..கொஞ்சம் நேரம் கிறக்கமா இருக்கும் அதுக்கப்புறம் சரியாகிடும்.......
இருவரும் மாற்றி மாற்றி அந்த ஒற்றை சிகரெட்டில் ஊதிஊதி புதுசா ஒரு அனுபவம் கண்டோம் .ரமேஷ் விவரமான ஆளு...டவுசர் பையிலிருந்து கொஞ்சம் வெங்காயம் எடுத்தான்....இருவரும் அதை தின்னுகிட்டே வாயெல்லாம் நல்ல துடைச்சிகிட்டு நல்ல பிள்ளையாட்டம்...ரோட்டுக்கு வந்தோம்....மேற்கு பக்கம் சூரியன் சின்ன தகடு போல தெரிந்து மேக கூட்டத்துக்கு பின்னால் நாங்க என்ன செய்கிறோம் என்று ஒளிந்திருந்து பார்த்து கொண்டிருந்தான்..


அல்லி மலரும் அந்திப் பொழுதில் அரை இருட்டு தன்னில்
கள்ளர் போலே நாங்கள் நின்றே கடையில் வாங்கிய சிகரட்டுடனே
நெல்வயல் காட்டில் நடந்து சென்றே நண்பனும் நானும்பாதி ஊதினமே:
சொல்ல வெட்கம்: செஞ் சூரியனும் ஒளிந்து நின்று பார்த்தனனே.

அது அந்தக்காலம்...
அரைக்கால் டவுசருக்கு
அரும்பு மீசை முளைக்கா காலம்....

எழுதியவர் : சுசீந்திரன். (26-Jan-15, 7:04 pm)
Tanglish : pasumai
பார்வை : 235

மேலே