நடமாடும் நதிகள் - 28 - கே இனியவன்

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

கடத்தல்காரன் கையில் பணம்
வன அதிகாரிகள் பாராமுகம்
ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்

^^^

காடழிப்பு
ஆற்று நீர் ஆவியானது
புலம்பெயரும் அகதியானது கொக்கு

^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்

^^^

சட்டம் ஒரு இருட்டறை
கருவறை இருட்டறை
சிசு மர்மக்கொலை

^^^^^

வியர்வை சிந்தாமல் வேண்டாம்
வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்
ஊதியம்

@

கண் வரைதல் ஓவிய போட்டி
முதல் பரிசு பெற்றான் மாணவன்
பார்வையற்ற மாற்றுத்திறனாளி

@

தொட்டிக்குள் இலை குவிகிறது
தூய்மையானது சாப்பாட்டுக்கடை
ஏழை வயிறு நிரம்பியது

@

பூமி உருண்டை
அதுதான் சிறிதாக இருக்கிறது
தொட்டிக்குள் மீன்

@

வெற்றி கிடைக்குவரை
கட்சி மீது விசுவாசமாய் இரு
தேர்தல் ராஜ தந்திரம்

@@@

தான் பெற்ற இன்பம் பெறுக வையகம்
என்பதற்கு இணங்க இத்தொடரை அழகுபடுத்திய அனைவருக்கும்
மனமார்ந்த நன்றி

^^^

தொடர் தொகுப்பாசிரியர் தோழர் ஜின்னா
தொடர் ஒருங்கிணைப்பாளர் தோழர் முரளி T N
முகப்பட வடிவமைப்பாளர் தோழர் கமல் காளிதாஸ்
முகப்பட பெயர் பதிப்பாளர் தோழர் ஆண்டன் பெனி

==================
கவிப்புயல் இனியவன்
==================

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (4-Mar-16, 5:33 am)
பார்வை : 723

மேலே