உறவுகளில் பாகுபாடு

மூத்தோர் சொல் கேள் என்னும்
பழமொழி சென்று முதியோர்
சொல் கேளாதே என்னும் புதுமொழி
வந்துள்ளது, காரணம் ஒரு சில
முதியோர்கள்.

உதாரணமாக,
சாதி என்னும் போர்வையில்
மருமகளைத் திட்டும் மாமியார்,
அழுகையில் மருமகள், நடுவிலே
பொம்மை போலே தலைவன்.
இது போன்ற சண்டைகள் தொடராமல்
இருக்க தாயும்,மனைவியும் சமமாக
நடத்தப்பட வேண்டும்.

இளைஞர்களின் கையில் இந்தியா?
பிறர்க்கின்னா முற்பகல், தமக்கின்னா
பிற்பகல் என்று இளைஞர்கள் என்ன
வேண்டும்.ஒரு சில இளைஞர்கள் பெற்றோர்களை
மதிப்பதில்லை.

உதாரணமாக,
மனைவியின் பேச்சைக் கேட்டு
பெற்றோரைத் தவறாக
புரிந்துகொள்ளாமல் மனசாட்சியின்
பக்கம் செயல்பட வேண்டும்.
எந்த வீட்டில் பெற்றோரும்,மனைவியும்
சமமாக நடத்தப் படுகின்றார்களோ
அதுவே வீடு,
மற்றதெல்லாம் வறண்ட காடு.

எழுதியவர் : (19-Jun-11, 1:47 pm)
பார்வை : 586

மேலே