எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கொஞ்சும் மழலை; எழுதியவர் சதங்கா குழலும் உன்குரல் இனிமையில்...

  கொஞ்சும் மழலை;  

 எழுதியவர் சதங்கா
குழலும் உன்குரல் இனிமையில்
குழலும் யாழும் கீழே

மருளும் உந்தன் விழிகள்
பிறமாந்தரைக் காண்கையிலே

சுற்றிச்சுற்றி வந்தே காலைக்
கட்டிக் கொள்ளுவாயே

அள்ளி அணைக்கத் தந்தை
சொல்லித்தர அன்னை

சொந்த பந்தம் எல்லாம்
நண்பர் குழுக்களோடே

பொழுதும் வந்து உதவி - வீட்டைத்
தலை கீழாக்குவாயே

நாளும் சண்டை கொண்டு
நாடக மாடிடுவாயே

அறுசுவை அமுது உண்பாய்
விளையாட்டி லென்விரல்களாலே

அயற்சி யின்றி நீயும்
ஓடிஆடும் போதே

தத்தித் தவழும் என்மனம்
உன்அழகு மழலையாலே  

நாள் : 6-Apr-16, 2:00 am

மேலே