எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புது மலரின் அமுதை தேடி அலையும் பட்டாம் பூச்சிகளை...

புது மலரின் அமுதை தேடி அலையும் பட்டாம் பூச்சிகளை போல வாழ்க்கையில் புது விடியலை காத்திருக்கும்  எண்ணற்ற மனதின் வண்ணங்கள் சோடிக் கண்களின்  விழித்திருப்பில் இரவை வரவாக்கி உலகின் புதிய விடியலில் வருடத்தை மட்டுமின்றி வாழ்க்கையையும் தேடிக் கொண்டிருக்கும் மனங்கள் மண்ணில் ஓராயிரம் 


இன்பம் துன்பம் அசையும் காலச் சக்கரத்தில் வறுமையும் நோயும் ஏழ்மையும் என்ற வரிசையில் நகரும் சுமையான காயங்களில் சுகம் தேடும் மனங்கள் மண்ணில் சில கோடி 

கண்ணீரும் கவலையும் ஏக்கமும் என்ற போராட்டத்தில் ஆயுதமின்றி நாடோடி போல் அசைந்து திரியும் பாலைவன ஒட்டகம் போல் வாழ்க்கையை தேடி தொலைத்தவர்களின் மனங்கள் மண்ணில் 
பல கோடி 

முயற்சி தோல்வி சலிப்பு என்ற வெற்றியை தேடும் பாதையில் முள் மேல் கால் வைத்து காத்திருக்கும் மனங்கள் இந்த மண்ணில் எண்ணற்றவை 

காலத்தால் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கும் உலக மக்களின் வாழ்வில் கதிரவன் நிலா சுழன்று  விளையாடும் ஒளியையும் இருளையும் விளிப்பதை போல வருங்காலமும் மக்கள் அணைவரின் வாழ்விலும் பல நாள் இன்பம் எனும் சுடரையும் சில நாள் துன்பம் எனும் இருளையும் தந்து வாழ்க்கை என்றால் என்னவென்று அறிய வருங்கலாம் ஒரு வாடாத பூவாய் நம் வாழ்வில் முளைத்து சோலையாக காத்திருக்கும் நொடியில் சில நொடிகள் விடிந்து கடந்து போய் விட்டன.

நான் முகம் காணாத நண்பர்கள் தான் இங்கே அதிகம் தென்றலால் கடல் கடந்து ஒரு சேதி அனுப்புகிறேன் நாளை விடியும் முன்றலில் மணக்கும் துளசியாய் இல்லையென்றால் மணக்கும் சிறு பூவாக என் வாழ்த்தும் உங்கள் கொண்டாடத்தில் இணைந்து உறவாடும் 

நண்பர்கள் மற்றும் தாய்,சகோதரி, போன்ற அனைத்து உறவுகளுக்கும் என் நெஞ்சார்ந்த இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு  நல் வாழ்த்துக்கள் 


நாள் : 12-Apr-16, 11:43 pm

மேலே