எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"பெண்ணே நீ நித்தமும் 
மலர்ந்திடு ,💐
வளர்ந்திடு ,💐
செழித்திடு,💐
உயர்ந்திடு ,💐
  
எல்லாவற்றுக்கும்
மேலாக,
என்றென்றும் 
மகிழ்வோடு 
வாழ்ந்திடு!".💐💐💐

மேலும்


கூண்டுக்கிளி



நிலைமையினாலே

விலைமகள் ஆனேன்.

குடல்பசி தீர்க்க, நான்

உடல் பசி தீர்த்தேன்.



திசை பிசகியதாலே

சிதைந்ததென் தசை.

எள்ளும் உலகில் காலூன்ற

எத்தனித்தேன்.

உள்ளம் செத்த உடம்பை

ஊருக்களித்தேன்.



சூழ்நிலை, சதிவலை,

பிறந்து வந்திங்கே,

பிறழ்ந்து விட்டேன்.



கதவடைத்து புறந்தள்ளியதாலே,

கதவிலா வீட்டில் கடைவிரித்தேன்.

படுத்த படுக்கையான கணவன்.

பசியோடு நான் பெற்ற பிள்ளை.



துக்கம், தூக்கம், மறைத்து,

ஏக்கம், தாபம், புனைந்து,

விடியலின் முடிவு தெரியாது,

துடித்து நித்தம் துவள்கிறேன்.



முகத்தை அழகாக்கி,

அகத்தை அழுக்காக்கி,

சுகத்தை விருந்தாக்கி,

தேகத்தை வெறுப்பொடு விற்கின்றேன்.

தேய்கின்ற பிறையாய்
குறைகின்றேன்.



உணவில்லா உடலில் உணர்வுக்காய்
தடை போட்டேன்.

உயிர் உள்ள உடலில் உணவுக்காய்  
கடை போட்டேன்.



உயிரிலாப் பொருள் கடை உள்ளே.

உயிர்ப் பொருள் கடைத் தெருவிலே.

உடல(ழி)ளித்து வாழும் நிலையிலே.



எனக்கு மட்டும்

பகலில் சந்திரன்.

இரவில் சூரியன்.



செகத்தில் எனக்கு உணவில்லை.

செகத்தை அழிக்க எவருமில்லை.

கூண்டில் மாட்டிய பறவை நான்.

கூண்டைத் திறக்க பலருண்டு.

கூண்டைத் துறக்க வழியில்லை.



ச.தீபன்.

நங்கநல்லூர்.

94435 51706.

மேலும்

பெண்...
18னிலால் குமரியானாள்...
சேலை கட்டினாள் பெண்ணானாள்...
கட்டிளால் மனைவியானாள்..
தொட்டிளால் தாயானாள்..
குடும்பங்களில் தலைவியானாள்.. அடுப்பங்கரையில் அக்னியானள்
தலை கட்டினாள் மங்கையானால்...
காம கண்களுக்கு காமுகி ஆனால்...
பாச கண்களுக்கு சகோதரி ஆனால்...
அலங்காரம் செய்து அழகி ஆனால்..
வயது முதிர்ந்தவுடன் உன் பேர பிள்ளைகள் கேலி செய்யும் கிழவியானள்...

இத்தனை பெயர் கொண்ட உன்னை....
அவள் ஒரு சாதாரணப் பெண் தானே...
என்று சொல்லும் சமுதாயத்தில் வாழ்கிறாயடி.... கண்ணே......

நம்மை வயிற்றில் ஈன்றெடுத்த அவளை தாயாக பார்க்கிறாய்
உன் குழந்தையை வயிற்றில் சுமக்கின்ற அவளை மனைவியாக பார்க்கிறாய்....

ரோட்டில் நடந்து செல்லும் பெண் அவளை மட்டும் ஏன் உன் காம கண்களுக்கு இறையாக பார்க்கிறாய்...

உன் காம பசி தீர்க்க இறைவனால் உனக்கு அங்கீகரிக்கப்பட்ட மனைவி அவள் வரும்வரை வழிதவறி விடாதே மனிதா

பெண்மையை போற்றுவோம் பெண்ணினத்தை பாதுகாப்போம்... பலகீனம் 
அற்ற பெண்களுக்கு இறைவன் படைத்த பாதுகாப்பு கவசம் ஆண்களே...
👰👰
தமீம்✍️✍️✍️

மேலும்

சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது ராவணனின் கற்பும் தான்.
ராமனாக இருக்க வற்புறுத்தவில்லை 
ராவணனாகவாச்சும் இருங்களன்; பெண்ணியம் வாழும் 

மேலும்

நீ
ஒரு துளி நீர் தந்தாள்
நீரூற்றை தருவாள்!

நீ
ஒரு கை நீட்டி அணை
தன் இரு கரங்களையும்
கொண்டு அணைப்பாள்!

நீ
ஒளிர நினைத்தால்
உனக்காக உருக நினைப்பாள்!

நீ
சிந்திக்கவே இல்லையெனினும்
உனை மட்டுமே சிந்தையிலே
வைத்திருப்பாள்!

நீ காட்டும் ஒருதுளி அன்புக்கு - தன்
வாழ்வு முழுவதும் அடிமையாகியிருப்பாள்!

பெண்மை..!
அவளை ஓர் அணுவேனும்
புரிந்து கொள்ளும் ஆண்மைக்கு
என்றென்றும் அவள் அடிமையே!

சிற்சில இன்பங்களை கூட தொலைப்பாள்;
உனக்கான பற்பல இன்பங்களை தேடித்தர!
பெண்ணிற்கு விலையாக அன்பை மட்டும் கொடு,
அதற்க்கு வேறெதுவும் தேவை இல்லை!

பூவாய்,கனியாய் இருக்கும் பெண்ணை
கல்லென மதிக்காதே - அது
உன்னை நோக்கி வந்தால்
தாங்குவதற்கு முடியாது உன்னால்!.........
 

மேலும்


மேலே