எண்ணம்
(Eluthu Ennam)
என்னைச் சிந்திக்கத் தூண்டிய வசனம்:-
" அன்பற்ற கணவன், அன்பற்ற மனைவி, அறிவற்ற தந்தை, அறிவற்ற தாய், திக்கற்ற பையன், திக்கற்ற பெண், பொறுப்பற்ற குடும்பம்,
பொறுப்பற்ற சமுதாயம் என்னும் இந்தக்கொடுமைகள் இல்லாத நல்ல நாளை
எதிர்பார்த்துத் தொண்டு
செய்கிறவனே வீரன்.
அதற்கு ஏற்றபடி எண்ணக் கற்றுக் கொள்கிறவனே அறிஞன்.
அந்த நாள் வர நெடுங்காலம் செல்லலாம்.
ஆனால், எண்ணுவதற்கு நெடுங்காலம் வேண்டியதில்லை.
இன்றே எண்ண முடியும் அல்லவா?
இப்போதே எண்ண வேண்டும் அல்லவா?
எண்ணுவதற்கு ஒரு
துணிவு - வீரம் - வேண்டும்.
அந்தத் துணிவு உடைய வீரன் தான் ஞானி.
அவன் என்ன எண்ண வேண்டும்?
அன்பற்ற, அறிவற்ற, திக்கற்ற, பொறுப்பற்ற
நிலைகளுக் (...)
அடிமை பட்டு கிடப்பது எம் தமிழர்க்கே இல்லாத குணம் ...
நாங்கள் எங்கள் நாட்டை பெறுவோம் ...தமிழ் நாடும் தமிழ் ஈழமும் .....
வீரம் எம்மோடு பிறந்தது ... படை நடத்துவோன் யாம் ...
தமிழ் தாகம் எம்முள் அடங்காதது ...
இன்று சில தமிழர்களே, தமிழ் தெரியாமல் இருக்கிறார்கள் ...
ஒருவனுக்கு அடையாளம் அவன் மொழி தான் ...
உங்கள் அடையாளத்தை எக்காலத்திலும் விட்டு தராதீர்கள் ...
மனிதன் பிறந்த பின் தான் சாதி பிறந்தது ...
அடையாளம் வேறு... வெறி வேறு ...
வெளிப்படையாக சொல்கிறேன் எமக்கு எந்த பயமும் இல்லை
என் அடையாளம் எம்மொழி ...தமிழ் ...
இங்கே ஐய்யர் வேண்டாம் , மேனன் வேண்டாம் ,ரெட்டியார் வேண்டாம் , காந்தி வேண்டாம் , நேரு வேண்டாம் , மோடி வேண்டாம் .
இங்கே தமிழ் மட்டும் போதும் ...தமிழர் ஆளட்டும் ...மண்ணின் மைந்தன் ஆளட்டும்...
வாழ்க தமிழ் ...