எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசையும் , காதலும் யார் மீது 

வேண்டுமானாலும் வரலாம் 
ஆனால்
ஏக்கம் நமக்கு பிடித்த 
ஒருவர் மீதுதான் வரும்.

மேலும்

பல்கலைக்கழக நண்பர்களை பிரியும் போது...

97தொப்பில் கொடியகற்றி -பல
தொலைந்து போன நினைவுகளுடன்
தொலையாமல் வாழ்வதற்கு 
தோழ் கொடுத்த கிழக்கன்னையே!!!!!

கொரோனாவோடு போராடி
கோதாரி சகரானோடு திண்டாடி
தொலைத்த எம் தோழமையை- மீண்டும்
தொட்டணைக்க முடியுமா??

அறியாத zoom இனிலே- விடை
தெறியாத assignment உம்
மிச்சரோடு லெக்சருமாய்
மிரண்டது ஞாபகம் இருக்கிறதா?

படைப்பினிலே வேற்றவனாக்கி
உடுப்பினிலே மாற்றவனாக்கி-இன்று
தோற்றுப்போன சமூகத்தை- நம்
தோழமையே சீர்திருத்தும்

கீழ்தனமாய் நீராடி
கிட்ணஸ் சாதணை படைத்த
கிளர்ச்சியான கூட்டம் இன்று
கிளம்புகிறது பார்த்தாயோ!!!

கண் கலங்கி கவி செய்த-இந்த
கள்வனை மறந்திடாமல்-எங்கோ
கட்டழகாய் வாழ்வமைத்து
காட்டிடுவாய் இப் பாரினிற்கே.....

மேலும்

எப்படியும் உன்னை

சந்திக்க வேண்டும்
என்ற ஏக்கத்தில்...
உன்னை தேடி 
என்னைத் 
தொலைக்கிறேன்...

மேலும்

[ஏக்கம்.................]                                                 அவள் எவனுடன் செல்கின்றளோ                       இவன் அதை பார்க்க.........                                                     இவன் அவளுக்காக கவி எழுதுகின்றானே......            & (...)

மேலும்

நீயில்லா வீடு...


கலைந்த அறை,
அழுக்குத் தரை !

ஆளற்ற அடுப்பங்கறை,
தூக்கமற்ற படுக்கையறை !

ஹாலே கதி என்று படுக்கையில் 
நெஞ்சருகே உன்னாடையும்,
காதருகே உன் வார்த்தையும் தான்
நானுறங்க மந்திரம் !

முளை விட்டது,
நீ விட்டுப் போன உருளை !
கருத்தும் போனதடி,
நீ உண்ண சொன்ன மாதுளை !

ஹோட்டல் சாப்பாடு,
ஹாஸ்பிடலின் கூப்பாடு !

வாசற் கோலமும்,
பூஜையறை தீபமும்,
உன்னிரு விரல்களால்
எப்போது, நம் வீட்டில்?

முதலவன் எழுத்தும்,
இளையவன் கிறுக்கலும்,
சுவற்றில் அப்படியே, அகலாமல் 
டாட்டூ வாக அங்கங்கே!

வாட்ஸப்பில் விழித்து
கழிகிறது நேரம் ...
குட் நைட் டெக்ஸ்ட்
தூங்குவதற்கும் அலாரம் !

நாட்காட்டியும் கடிகாரமும்
கை கோர்த்து என்னோடு
வேகமாய் ஓட!

அந்நாளுக்காக ...!!!
உங்கள் வருகைக்காக...!!!

- முரளிதரன் 

மேலும்

Please share your comments friends 13-Mar-2022 12:52 pm

முதல் தந்த முத்தமும்-உன்

முகத்தோடு வாசமும்

காரிருள் கூந்தலும்-உன்

கழுத்தோட நீட்டமும்

பஞ்சான உதடும்-உன்

பகட்டான மார்பும்

ஆடையின் வாசமும் -கையில்

அகப்பட்ட உன் தேகமும்-இன்னம்

கொல்லுதடி கோதயே!!!!!!!!


Alaiyodu(அலையோடு)உன் வாசமும்

Kalodum(காலோடும்)உன் சத்தமும்

Sangu(சங்கு)போல் வார்த்தையும்-உன்

Hampeera(கம்பீர)பார்வையும்- என்னை

Asaikkamal(அசைக்காமல்) கொல்லுதடி....


காதோடு கனகனத்த-அந்த

கம்பீர வார்த்தை எல்லாம்

கண் மூடி நான் கேட்க

காதருகே கேட்குதடி........



காத்திருந்து தாங்காம-நீ

வந்திருப்பாய் என்று எண்ணி

மாடி வீட்டு மேல் படிய-என் கயல்கள்

பார்க்குதடி பைத்தியமாய்.....


தேடினேன் யன்னல் ஓரம்-என்

தேவதை இருப்பாள் என்று

தேய்ந்தது பாதணியே-என்

தேவதை அகப்படவில்லை.....


இருக்கும் இடமறியாமலும்

படிக்கும் பாடசாலை அறியாமலும்

பித்தனாய் அலைகின்றேன்

கோதையே வந்திடுவாய் கனவில் சரி...

மேலும்

கிராமத்துக் காதல்

காலங்கூட தெரியாம காலாற நடந்தபயல,
மூக்குத்தி அழகால உன்பின்னால திரிய வச்சியே,
உதட்டோர சிரிப்பால நெஞ்சத்த இனிக்க வச்சியே,
இடுப்போரம் மடிப்பால கள்ளக்கூட 
மறக்க வச்சியே,
கெண்டைக்காலு செவப்பால பித்துப்
பிடிக்க வச்சியே,

கரும்பு கூட கசந்து போகு உன் இனிப்பு பேச்சால,
சோறுகூட தேவப்படல உன் நெனப்பு வந்தால,

ஏரியோரம் காத்திருந்தேனே உன்
ஓரக்கண்ணு பார்வைக்கு,
எதிர்பாத்த கண்ணுக்கு உன்
அழகுமுகத்த காட்டுனப்போ,

நெஞ்சாங்கூட்டுல நூறுநெலாவும்
ஒன்னாசேந்து சிரிச்சுச்சே,
ஆகாசத்தெரையில மின்மினிப் 
பூச்சியெல்லாம் நாடகத்தப்
போட்டுக்காட்டி நம்ம காதல்
கதையப் பேசுச்சே,

பட்டிக்காட்டுப் பயலுக்கு
பாசத்தை காட்டினியே,
களவாணிக் கருப்பனுக்கு
காதல்தான் ஊட்டுனியே,

நீயிருக்கும் தெசபாத்து, 
கைகோக்க வந்தேனே,
நெழல்கூட தொடவிடாம, 
கண்ணவிட்டு மறஞ்சிட்டியே,

நேத்து பெஞ்ச மழையில, 
இன்னைக்கி மொளச்ச
காளான்தான் உம்பாசம்னு 
சொல்லாம சொல்லிப்புட்ட,

சொல்லிப்போன வார்த்தைக்கு 
அர்த்தங்கூட வெளங்காம, 
வயக்காட்டு பொம்மையையும்
கல்யாணத்துக்கு கூப்பிட்டே,

பஞ்சவர்ண கிளிபோல உன்ன
நானும் அலங்கரிச்சு , அழகுக்கு
அழகு சேக்க கூரைப்பட்ட வாங்குனே,

ஊரு சனங்க வியந்து பாக்க,
கல்யாண சேதி சொல்லி, 
உங்கழுத்துல நாங்கட்ட, 
தாலிக்கு தங்கங்கூட,
வயல வச்சு வாங்குனே,

புள்ளவொன்னு எனக்கு குடுத்து
அப்பான்னு கூப்பிட வெப்பான்னு
நெனச்சேனே,
நெனப்பயெல்லாம் வாரி சுருட்டி
தீய கொழுத்திப்போட்டாளே,

தேடித் தேடி சேத்த தேனாட்டம்
ஊறிப்போன காதலையும்,
ஒத்தக்கல்லு ஒதவியால
அடிச்சே கலச்சிட்டியே,

கலங்குன கண்ணுல தண்ணியின்னும் வத்தலயே,
வத்திப்போன தொண்டைக்கு தாகங்கூட எடுக்கலயே,
எடுபட்ட சிறுக்கி மனசுல கொஞ்சங்கூட
ஈரமில்ல,
ஈரமில்லா நெஞ்சுலயும்
பாற்கடல வார்த்த புள்ள,

சினிமாப்பாட்ட கேட்டாலும் அது
உன் நெனப்ப கூட்டுதே,
சின்னக்குளம் படித்துறையும் 
நம்ம கொஞ்சல் காட்டுதே,

பஞ்சுத்திரி கணங்கூட இல்லாத நெஞ்சுக்குள்ள,
எடதெரியா பாரம் வச்சு பூமியோட
பொதச்சுப்புட்ட,

உன்னுறவ மறந்துவிட 
நட்புறவ தேடுனே,
அந்த உறவும் கைய விட,
பூமி விட்டு போறே...!!!

- வெண்தேர்ச்செழியன்



மேலும்


மேலே