எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பல்கலைக்கழக நண்பர்களை பிரியும் போது... 97தொப்பில் கொடியகற்றி -பல...

பல்கலைக்கழக நண்பர்களை பிரியும் போது...

97தொப்பில் கொடியகற்றி -பல
தொலைந்து போன நினைவுகளுடன்
தொலையாமல் வாழ்வதற்கு 
தோழ் கொடுத்த கிழக்கன்னையே!!!!!

கொரோனாவோடு போராடி
கோதாரி சகரானோடு திண்டாடி
தொலைத்த எம் தோழமையை- மீண்டும்
தொட்டணைக்க முடியுமா??

அறியாத zoom இனிலே- விடை
தெறியாத assignment உம்
மிச்சரோடு லெக்சருமாய்
மிரண்டது ஞாபகம் இருக்கிறதா?

படைப்பினிலே வேற்றவனாக்கி
உடுப்பினிலே மாற்றவனாக்கி-இன்று
தோற்றுப்போன சமூகத்தை- நம்
தோழமையே சீர்திருத்தும்

கீழ்தனமாய் நீராடி
கிட்ணஸ் சாதணை படைத்த
கிளர்ச்சியான கூட்டம் இன்று
கிளம்புகிறது பார்த்தாயோ!!!

கண் கலங்கி கவி செய்த-இந்த
கள்வனை மறந்திடாமல்-எங்கோ
கட்டழகாய் வாழ்வமைத்து
காட்டிடுவாய் இப் பாரினிற்கே.....

பதிவு : தனுஜன்
நாள் : 18-Aug-23, 9:10 pm

மேலே