எண்ணம்
(Eluthu Ennam)
எண்ணம் காணொளி போட்டி
தோழர்களுக்கு வணக்கம்!எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017
தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.
விதிமுறைகள்:
- சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
- காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலா
நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pmபோட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 amமன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 amமாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
மனிதனற்ற வெளி...______________________களை கொல்லிகள்கிருமி கொல்லுமென பயந்ததால்மாடு,ஆடுகளின் மந்தைவெளிசெழித்திருக்கிறதுஅள்ளி இறைத்தவன்... (Rozhan A.jiffry)
08-May-2020 2:37 am
மனிதனற்ற வெளி...
______________________
களை கொல்லிகள்
கிருமி கொல்லுமென பயந்ததால்
மாடு,ஆடுகளின் மந்தைவெளி
செழித்திருக்கிறது
அள்ளி இறைத்தவன் அடுப்பூதுகிறான்
வட்டைப் பூவல்களில் தண்ணீர்பஞ்சம் தலை தூக்காததால் தவளைகளின்
மாநாடு தடையின்றி நடக்கிறது
கோடாலிகள் கூட்டுக்குள்
காட்டு விலங்குகளின் பேரடவி
மழை பூத்தபடி மலர்ந்து கிடக்கிறது
வேடனற்ற வெளியில் மானும்.முயலும்
மறித்து விளையாடுகின்றன
புகை பிடித்து புகைந்து கொண்டிருந்த
சாலையோர நிழல் மரங்கள்
இலை கொட்டி துளிர்த்து சடைத்து வளர்ந்து நிற்கின்றன
தொறட்டிகள் எலிக்கூண்டுகளில்
அணில்களின் கனிப்பொறியில்
இனித்து பழுத்து விழும்
தேன் சுளைகள்
தூண்டில் போட்டவன் கூண்டில்
இரையாக்க இரை போடுபவர்கள்
இரைதேடித் தவிக்க
மீன்களின் ஆறு,குளம் துள்ளி விளையாடி
கடலுடன் கை குலுக்கியபடி
தெளிந்து கிடக்கிறது
எனதருமைப் பறவைகளே இது உங்களின் வானம்
சிறகுகள் சுமையில்லைதானே?
எத்தூரம் வேண்டுமோ
போய் வாருங்கள்
இது உங்களுக்குமான உலகம்.
-ரோஷான் ஏ.ஜிப்ரி -
எது உனது விடையடி?அதுவே எனது நடையடி...உன்னால் எனக்குள் தடியடி!வாட்டி... (கார்த்திகைசெல்வன்)
06-Oct-2018 1:29 am
எது உனது விடையடி?
அதுவே எனது நடையடி...
உன்னால் எனக்குள்
தடியடி!
வாட்டி வதைக்குதே
தினசரி...
ஆகச்சிறந்தவன்
நானல்ல
உன்னால் சாகச்சிறந்தவன்
நானடி...!
தடைகளைத் தகர்க்க
என் படைகளோ ஆயத்தம்!
பயந்தோடி நீ தடம்
மாறினால் என்
மரணமே எதார்த்தம்!
பருத்த உன் முகப்பருக்களில்
பழுப்பவன் நான்!
உமிழும்
உன் எச்சில் குமிழியில்
நுரைப்பவனும் நான்!
சூடிய உன் மல்லிகையில்
வாடுபவன் நான்!
தேடிய உன் தேடலில்
தென்படுவேனோ
நான்!
உனை பல்லக்கில்
சுமக்க சுகமடி எனக்கு!
அதற்குள் பாடையில்
எனை சுமக்க
போடாதே கணக்கு!
என்னுயிர் வாகனத்தை
இயக்கும் எரிபொருளே!
எதுவாயினும் எனை
ஆக்கிவிடாதே எறிபொருளே..
மாற்றான் வீட்டு
மல்லிகைக்கு
மணமுண்டென்பதை
அறியும் நீ
மாற்றுச்சாதிக் காரணுக்கும்
காதல் மலருமென்பதை அறியாத எனக்குள்
எரியும் தீ...
சுள்ளிகளைத்தூவி
என்னுடல்
எரிக்காதே!
உனைச் சேராமல்
என்னுயிர்
மரிக்காதே!
செந்நிறக்குருதியில்
பொன்னிறக் காதலைத்
கலந்த பெண்ணே!
வெண்ணிற மனங்கொண்டு
நீ விளையாடியது
போதுமென
வந்துவிடு என்
முன்னே..!!!