எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எது உனது விடையடி? அதுவே எனது நடையடி... உன்னால்...

எது உனது விடையடி?
அதுவே எனது நடையடி...
உன்னால் எனக்குள் 
தடியடி!
வாட்டி வதைக்குதே 
தினசரி...
ஆகச்சிறந்தவன்
 நானல்ல
உன்னால் சாகச்சிறந்தவன்
நானடி...!
தடைகளைத் தகர்க்க
என் படைகளோ ஆயத்தம்!
பயந்தோடி நீ தடம்
மாறினால் என் 
மரணமே எதார்த்தம்!
பருத்த உன் முகப்பருக்களில்
பழுப்பவன் நான்!
உமிழும் 
உன் எச்சில் குமிழியில்
நுரைப்பவனும் நான்!
சூடிய உன் மல்லிகையில்
வாடுபவன் நான்!
தேடிய உன் தேடலில்
தென்படுவேனோ 
நான்!
உனை பல்லக்கில்
சுமக்க சுகமடி எனக்கு!
அதற்குள் பாடையில் 
எனை சுமக்க 
போடாதே கணக்கு!
என்னுயிர் வாகனத்தை
இயக்கும் எரிபொருளே!
எதுவாயினும் எனை 
ஆக்கிவிடாதே எறிபொருளே..
மாற்றான் வீட்டு 
மல்லிகைக்கு 
மணமுண்டென்பதை 
அறியும் நீ 
மாற்றுச்சாதிக் காரணுக்கும்
 காதல் மலருமென்பதை அறியாத எனக்குள்
எரியும் தீ...
சுள்ளிகளைத்தூவி 
என்னுடல் 
எரிக்காதே!
உனைச் சேராமல்
என்னுயிர்
மரிக்காதே!
செந்நிறக்குருதியில்
பொன்னிறக் காதலைத்
கலந்த பெண்ணே!
வெண்ணிற மனங்கொண்டு
நீ விளையாடியது 
போதுமென 
வந்துவிடு என்
முன்னே..!!!

நாள் : 6-Oct-18, 1:29 am

மேலே