எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனிதனற்ற வெளி... ______________________ களை கொல்லிகள் கிருமி கொல்லுமென...

மனிதனற்ற வெளி...
______________________
களை கொல்லிகள்
கிருமி கொல்லுமென பயந்ததால்
மாடு,ஆடுகளின் மந்தைவெளி
செழித்திருக்கிறது

அள்ளி இறைத்தவன் அடுப்பூதுகிறான்
வட்டைப் பூவல்களில் தண்ணீர்பஞ்சம் தலை தூக்காததால் தவளைகளின்
மாநாடு தடையின்றி நடக்கிறது

கோடாலிகள் கூட்டுக்குள்
காட்டு விலங்குகளின் பேரடவி
மழை பூத்தபடி மலர்ந்து கிடக்கிறது

வேடனற்ற வெளியில் மானும்.முயலும்
மறித்து விளையாடுகின்றன

புகை பிடித்து புகைந்து கொண்டிருந்த
சாலையோர நிழல் மரங்கள்
இலை கொட்டி துளிர்த்து சடைத்து வளர்ந்து நிற்கின்றன

தொறட்டிகள் எலிக்கூண்டுகளில்
அணில்களின் கனிப்பொறியில்
இனித்து பழுத்து விழும்
தேன் சுளைகள்

தூண்டில் போட்டவன் கூண்டில்
இரையாக்க இரை போடுபவர்கள்
இரைதேடித் தவிக்க
மீன்களின் ஆறு,குளம் துள்ளி விளையாடி
கடலுடன் கை குலுக்கியபடி
தெளிந்து கிடக்கிறது

எனதருமைப் பறவைகளே இது உங்களின் வானம்
சிறகுகள் சுமையில்லைதானே?
எத்தூரம் வேண்டுமோ
போய் வாருங்கள்
இது உங்களுக்குமான உலகம்.

-ரோஷான் ஏ.ஜிப்ரி -

பதிவு : Rozhan A.jiffry
நாள் : 8-May-20, 2:37 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே