எண்ணம்
(Eluthu Ennam)
நன்கு தின்பதற்கு குறைச்சல் இல்லை
அநியாயம் அக்கிரமம் செய்யும் கோடிக்கணக்கான மக்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி தினமும் நன்கு தூங்குகையில், மனசாட்சியை அதிக அளவில் சார்ந்து வாழும் சிறுபான்மை மக்களில் சிலர் தூக்கமின்மை காரணமாக அவதிப்படும் நிலை எதை காட்டுகிறது தெரியுமா? உண்மையில் தெய்வம் என்று ஒன்று இல்லை, அல்லது ஒரு வேளை இருப்பினும் அது நல்லவர்களை காக்கவில்லை என்பதையும் நல்லவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் என்பதெல்லாம் வெறும் கூற்று என்பதையும் தான் கண்கூடாக நிரூபிக்கிறது.
யாரேனும் வேண்டப்பட்டவர்கள் மறைந்து விட்டால் வருவது மட்டுமே துக்கம் இல்லை. படுத்த சிறிது நேரத்தில் தூங்காமல் இருப்பது, தூக்கத்தின் இடையில் அடிக்கடி விழித்து எழுவது, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பது, அதனால் தேவையற்ற சிந்தனைகள் மற்றும் கவலைகள் படுவது, இவற்றின் விளைவாக மறுநாள் முழுவதும் புத்துணர்ச்சி இல்லாமல் தவிப்பது , இவை அனைத்துமே துக்கம் தரும் நிகழ்வுகள் தான்.