எண்ணம்
(Eluthu Ennam)
ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து... (பத்மா சுப்ரமணியன்)
23-Feb-2024 11:16 am
ஆண்டுகள் பல கடந்திடினும் ஆயிரம் உறவுகள் இருந்திடினும் தொலைந்து போன நட்பு மீண்டும் உயிர் பெறும் பார்த்த நொடிதனில் - மனதினுள்
இமைகள் இமைக்க மறந்த நொடி - இமை குடைக்குள் நிறைந்து நின்றவளால் தோன்றியது - நொடி பொழுதும் இனி இமைக்கவே கூடாதென
என் ரசனையின் தொடக்க புள்ளியும், முற்று புள்ளியும் அவள் தான் என்பது, அவளுக்கே தெரியாத பொழுது ரசிக்கும் என்னையா ரசிக்க போகின்றாள்!