கியாரண்டி தேவை இல்லை

கியாரண்டி தேவை இல்லை!
E.M.I. தொல்லை இல்லை!

வாகன இறைச்சல் இல்லை!
சுட்டெரிக்கும் வெய்யில் இல்லை!

24 மணி நேரமும்
குளிர்ந்த காற்று வசதி!
உடனே குடியேற உகந்த இடம்!

வருக! வருக!
என்று தலையசைத்து
வரவேற்கின்றன...
மரங்கள்!

கான்கிரீட் கட்டிட இடுக்கில்
கூடு கட்டி குடி இருக்கும்
சிட்டுக் குருவிகளை!

(பழமை மறந்து பாரம்பரியம்
தொலைத்த கலி காலம்)

-வெண்ணிலா------------

எழுதியவர் : வெண்ணிலா (8-Jan-13, 5:42 pm)
பார்வை : 69

மேலே