ஆத்திகன் ..!!

எனக்கு உரு கொடுத்தது அன்பு நிறைந்த
அன்னை எனும் தெய்வம் ...!!!
பாசத்துடன் மரியாதைகளையும் உணர செய்தது
தந்தை எனும் தெய்வம் ...!!!
ஒழுக்கத்துடன் அறிவையும் வளர்த்தது
குரு எனும் தெய்வம் ...!!!
உறவுகளையும் கடந்த உறவானது , என்இன்ப துன்பங்களை அவனதாக்கும்
நண்பன் எனும் தெய்வம் ...!!!
நானும் ஆத்திகன் தான்
பிற உருவங்களை வணங்காத போதிலும்...!!!!!!

எழுதியவர் : Kavin Bala (8-Jan-13, 8:59 pm)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 102

மேலே