உனதருகினில் என் பயணம்

உனதுஅருகினில் இருக்க தவமாய்
காத்திருந்த பொழுதுகள் நான் அறிவேன்
நீ அறிய வாய்ப்பில்லை
பயணங்கள் புதிது என்றபொழுதும்
சொற்ப நேரங்கள் தான்
உனது சுவாச காற்று என் முகத்தினில்
பட்டதும் மெய் மறந்தேன்
சோகம் அனைத்தும் களைந்தொடின
சட்டென உன் மீதினில் சாய்ந்த
கணத்தினிலே -நீ அறியாய் நான் அறிவேன்!
உனது அருகினில் இருக்க தவித்தவன்
நான்தானே!
நேரங்கள் எத்தனை கொடியது உன்
மீதினில் சாய்ந்த சில நொடிகளிலே
பறந்தன பயணம் !
இனி அடுத்து உன் அருகினில் அமரும்
வாய்ப்பினை எதிர்பார்த்து ஏக்கத்தோடு
இறங்கினேன் பயணம் இனிதாக அமையும்
என்ற வாசகத்தை படித்தபடி
இனியும் " பேருந்தினில் ஜன்னல் அருகே
இருக்கை" எப்போது அமையும் என்று ...........

எழுதியவர் : கார்த்திக் (திருநெல்வேலி ) (9-Jan-13, 2:45 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 138

மேலே