யாருக்கு கொடுக்க விடுதலை

கட்டில் சபிக்கிறது
என் புரண்டல்
தாங்காமல்

தட்டு திட்டுகிறது
என் கோலம் கண்டு

குழையும் சோப்பு தேயாமல்
அழுகிறது தண்ணிரில் மூழ்கி

உண் பிம்பம் பார்த்து என்
பிம்பம் உடையும் என்று
புலம்புகிறது கண்ணாடி

விட்டு விடு என்று கெஞ்சுகிறது
காகிதம் என் கிறுக்கல்
தாங்காமல்

வருகிறது ரத்தம் காதில்
உன் பேச்சை கேட்டு
என்றான் நண்பன்

வலிக்கிறதாம் கை பூசாரிக்கு
எனக்கு வேப்பிலை அடித்து

கால் நோவால் துடித்து விட்டால்
என் அம்மா நான் கிறுக்கன்
என்று பலமுறை மருத்துவமணைக்கு
அழைத்து சென்று

இதில் யாருக்கு கொடுக்க விடுதலை

உன்னை நீ எனக்கு கொடுக்காத வரை

இவர்களுக்கு இல்லை என்று
சொல்லடி விடுதலை

எழுதியவர் : Manikandan sugan (10-Jan-13, 7:44 pm)
பார்வை : 111

மேலே