எஞ்சிய சுகம்
தூண்டும் சுகம்
தீண்டும் போதும்
வருவதில்லை..
வேண்டும் சுகம்
தீண்டிய பின்
சுவைப்பதில்லை..
தாண்டிய பின்
வேண்டிய சுகம்
நிலைப்பதில்லை..
வேண்டிய சுகம்
வாடிய பின் கிடைப்பதில்
அர்த்தமில்லை..
தூண்டிய பின்
மீண்ட சுகம்
அலுப்பதில்லை..
எஞ்சிய சுகம்
மிஞ்சிய பின்
தொடர்வதில்லை..
வாழ்வின் சுவை
ருசிக்கும் வரை
தெரிவதில்லை..
ருசிக்கும் வாழ்க்கை
நிலைப்பதில்லை!!!