ஆட்டோகிராப் !!!
எதிர்பாராமல் நடந்து விட்டது - விபத்து !!
தேவைப்பட்டதோ அரிய வகை இரத்தம் !!
" இல்லை " என்றது மருத்துவமனை !?
தேடினேன் !! கண்ணில் பட்டதோ !?
என் நண்பர்களின் - " ஆட்டோகிராப் புத்தகம் "
அதில் இருந்த , என் நண்பர்களின் பிரிவுகளோடு பொருந்தியது - நான் தேடிய அரிய வகை ?!!
என் நண்பனால் ,
கிடைத்தது இரத்தம் அல்ல !!
இழக்க இருந்த என் சொந்தமும் சேர்த்து !!
நண்பர்கள் பிரிவதில்லை !!
எப்போதும் உன்னுடனே இருப்பார்கள் !!
உன் கையில் !! ஆட்டோகிராப் வடிவில் !!
ஆட்டோகிராப் -
நினைவுகளை பகிர்ந்து கொள்ள மட்டும் அல்ல !!
நட்பின் பயனை உணத்தவும் !!
உயிர் காக்கவும் தான் !!!