உன்னில் ஒரு மாற்றத்தை எதிர் நோக்கி !!
என் உணர்வுகளின் வெளிப்பாடாய் !!
என் எண்ணத்தில் தோன்றிய சொல்லாய் !!
என் சொல்லில் விளைந்த செயலாய் !!
என் உடலின் உயிராய் !! உயிர் நண்பனாய் !!
என்றும் நீ இருப்பாய் - என்று நான் !!
ஆனால் , நீயோ ??
என் வலதை இடதாகவும் ,
இடதை வலதாகவும் ,
மற்றவர்களுக்கு மாற்றிக் காண்பிக்கும்
கண்ணாடியாய் தோற்றம் அளிக்கிறாய் !!
என் கனவு மேகங்கள்
களைந்து கொண்டு இருக்கும் இந்த வேளையில்!!
உன்னில் ஒரு மாற்றத்தை எதிர் நோக்கி
- உன் உயிர்த் தோழன் !!!