அத்தை மகள்
இத் தரையில் வந்திட்ட அத்தைமகளே
நித்திரயில் சித்தம் கவர்ந்தவளே
எத்திக்கும் புகழ் மணக்க தரை வந்தவளே
தங்கத் தமிழ் மகளே இத் தரணிக்கு வருகவே
கழனியில் செந்நெல் விளைந்தாச்சு -கன்னிப்
பெண்ணின் மனதில் காதல் வந்தாச்சு
இனிக்கும் கரும்பாய் காதலன் கிடைத்தாச்சி
மஞ்சள் கிழங்காய் அவள் முகமும் மலர்ந்தாச்சி
சிற்றாடை சேலை கட்டி சிவப்பு பொட்டு வச்சி
அத்தானை பார்க்கும் அவசரத்தில் அவள் போனால்
போன வேகத்திலே திரும்பி வந்தாள் ஏன் என்று
கேட்டதற்கு ரவிக்கை போடாமல் போனாளாம் .
காதல் மயக்கத்தில் கன்னி செய்த தவறை
தை மகளும் திருத்தி விட்டாள் - காளை அவனோ
கண்டாங்கி கட்டியவளை கண் நிறைந்து பார்த்து
கட்டிக்க மனது வைத்தான் அங்கே இரு மனதும்
பொங்கி வழிந்ததே பொங்கல் திரு நாளில் .