ஆயிரம் ஜென்மம் அன்னையாக நீ

உதிரம் கொடுத்"தாய்"....
உரு கொடுத்"தாய்"....
உயிர் கொடுத்"தாய்"....
உன் ஜீவன் எனக்களித்து...
என்னை ஈன்றேடுத்"தாய்"...
நீ என் "தாய்"

தாலாட்டினாய் என்னை....
சீராட்டினாய் என்னை....
ஆளாக்கினாய் என்னை...
உலகோடு போராடி!
உன் உணர்வுகளை எனக்களித்து...
மனிதனாகினாய் என்னை!
நீ என் "அன்னை"

உன் பேச்சும் நான்தானம்மா,,,
உன் மூச்சும் நான்தானம்மா,,,
உன் நினைவும் நான்தானம்மா,,,
உன் கனவும் நான்தானம்மா,,,
உன் வாழ்வும் நான்தானம்மா,,,
உன் உயிரும் நான்தானம்மா,,,
நீ என் "அம்மா"

பாசம் என்ற மூன்று எழுத்தும்..
நேசம் என்ற மூன்று எழுத்தும்..
அன்பு என்ற மூன்று எழுத்தும்..
பண்பு என்ற மூன்று எழுத்தும்..
கல்வி என்ற மூன்று எழுத்தும்..
வாழ்வு என்ற மூன்று எழுத்தும்..
ஒரே மூன்று எழுத்தில் அடக்கமம்மா..
அது என் "அம்மா"

என்னை பெற்றவளே...
நல் வாழ்வு தந்தவளே...
உன் முகம் பார்க்கையிலே ஆயிரம்
அன்னை தெரசா தெரியுதம்மா...
ஆயிரம் ஜென்மம் போதாதம்மா!
உன் பெருமை நான் சொல்ல...

ஆண்டவனை வேண்டுகிறேன்....
ஆயிரம் ஜென்மம் வேண்டுமென்று!
அதிலும் அன்னையாக நீயே
வேண்டுமென்று..."அம்மா"

எழுதியவர் : சரவணன் (3-Nov-10, 11:07 am)
பார்வை : 445

மேலே