ஈழம்

முல்லை தீவில் ....

வெடித்து தீர்ந்த குண்டுகள் ,
எங்கும் பிணம் திண்ணிகள்...

பதறிய மனங்கள்,
கதறிய இனங்கள்,
சிதறிய பிணங்கள்,

எச்சங்களே மிச்சமாயின...

புகை சூழ்ந்த இடமெல்லாம்
இன்று பத்திரிக்கைகளுக்கு
புகைப்படமாயின...

அப்பாவி ஆன்மாக்கள் சுற்றும் இடம்
சுற்றுலா திடல் ஆன கொடூரம்...

பகைக் கொண்ட பகைவர்களுக்கு
நகை தந்து சென்றது
கடைசி உயிர்...!!

எழுதியவர் : ஹசீனா (16-Jan-13, 1:59 pm)
பார்வை : 159

மேலே