நிலாவுக்கு முத்தமிடுவோம் -கே.எஸ்.கலை

வணக்கம் தோழர்களே....

எழுத்து தளத்தில் பல்வேறு இடர்களுக்கு மத்தியில் ஆக்கம் படைக்க வரும் அனைவரில் நானும் ஒராள்!

இங்கு நடக்கும் எல்லா விடயங்களையும் பாரபட்சமின்றி நோக்குதலும், தூக்குதலும், தாக்குதலும் என எனது நடையினை எனக்காகக் கூட சமரசம் செய்துக் கொள்ளாமல் நடந்துக் கொண்டிருக்கிறேன் !

எனது எழுத்துக்கள் யாருக்கும் முரணாகவோ, பாதகாமாகவோ, சாதகமாகவோ இருக்கலாம்..

ஆனால் என் மனசாட்சிக்கு தவறானதாக இருக்கக் கூடாது என்ற ஒரே ஒரு கொள்கையின் கீழ் நடக்கும் மிகச் சாதாரண வளரும் படைப்பாளி நான்!

இந்த முன்னுரை எதற்காக என்று சில வேளை நீங்கள் கேட்கலாம்...

நான் விளக்கம் சொல்லப் போவதில்லை..நீங்கள் எல்லோரும் நன்கு சிந்திக்கக் கூடிய வல்லமைக் கொண்டவர்கள் என்பதால் !

என்னடா நிலாவுக்கு முத்தமிடுவோம் என்று சொல்லிவிட்டு ஏதோ புலம்பிக் கொண்டு இருக்கிறான் என்று நீங்கள் நினைக்கக் கூடும்...காரணம் இது தான் !

ஏதோ நாலு வரிகளைக் கிறுக்கினோம்...
தளத்தில் பதிவு செய்தோம்..
புள்ளி வந்தது, கருத்து வந்தது என்று துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கும் நம் மத்தியில் ஒரு சக படைப்பாளியாக இருந்து படைப்பாளிகள் அனைவரையும் ஒன்றிணைத்து, ஒரு உயரிய நடுவர் குழாமினை ஒருங்கிணைத்து மிக நேர்த்தியாக ஒரு விழாவினை முடித்திருக்கும்,
என் அன்பிற்குரிய அண்ணா நிலாசூரியனை
வாழ்த்த எனக்கு வயதில்லை...
பாராட்ட எனக்கு வார்த்தையில்லை....
உண்மையான உணர்வுகளைச் சொல்ல தமிழ் கூட பஞ்சமாகத் தெரிகிறதே என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன் !

அப்போது தான் இந்த எண்ணம் வந்தது....
முத்தமிடுவோம் என்று..................
(ஏலே..கலை ஒரு ஆம்பிளப் புள்ள....)

இது தான் எனக்கு தெரிந்த ஒரே வழி....
இது என் அன்பை வெளிக்காட்ட....வாழ்த்தைச் சொல்லிக் கொள்ள எனக்கு சரியெனப் படும் ஒரே வழி....!

இந்த விழாவினை செய்து முடிக்க அவருக்கு நிச்சயம் எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நிச்சயம் யூகிக்க முடிகிறது !

அதற்கு ஒத்தாசை வழங்கிய நடுவர்கள் மற்றும் அனைத்து பங்காளிகளுக்கும் அன்போடு நன்றிச் சொல்ல ஆசைப் படுகிறேன் !

படைப்பாளிகளை வெளிக் கொணர செய்த அவரின் முயற்சிக்கு ஊக்கமளிக்க படைப்புக்களைச் சரமாரியாக வழங்கிய அனைத்து தோழர்களுக்கும் நன்றி கூற ஆசைப் படுகிறேன் !

வெற்றி தோல்வி என்பது இலக்கியத்தில் எப்படியுமே சர்ச்சைகளை உருவாக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...

எந்த பெரிய மலையின் பின்னாலும் ஒரு பள்ளம் இருக்கத் தான் செய்யும்...
நாங்கள் பள்ளத்தை நோக்கிப் பார்க்காமல் உயர மட்டுமே முயசிப்போம்.

எங்களுக்கு..இமயம் பேனை முனைக்கடியில் என்பது சத்தியம்!

இந்த பெரிய விழாவினை மிக அக்கறையாக செய்து முடித்த நிலாசூரியன்
அண்ணாவிற்கும் அதற்கு உதவி புரிந்த அனைத்து தோழர்களுக்கும் பெரியோருக்கும் ஒரு நலன்விரும்பியாக நன்றி தெரிவித்துக் கொள்வதில் திருப்தியடைகிறேன் !

நிலா அண்ணா... உம்மம்ம்மா X 1000000000..........

உங்கள் பயணங்களில் எங்கள் கைகளும் இனி கோர்த்துக் கொள்ளும் கெட்டியாகவே....தொடர்வோம் !

(இது தான் துதி பாடும் நேரம் !)

(தைத்திருநாள் கவிதைப் போட்டி குறித்தான படைப்பு )

எழுதியவர் : கே.எஸ்.கலை (16-Jan-13, 9:13 pm)
பார்வை : 236

மேலே