கிறுக்கல்க​ள்...

கெட்டவன்:

தேவையானவர்களுக்கு தேவையான போது

தேவைப்பட்டபடி இருந்து நல்லவனாய் இருப்பதை விட

அவர்களிடம் கெட்டவனாய் இருப்பதே மேல்...



உண்மை முகம்:

மகிழ்ச்சியான தருணங்கள் காட்டுவதை விட

கஷ்டமான காலங்கள் காட்டிவிடுகின்றன...



கோமாளி:

வாழ்க்கையின் தேவைகளை அதிகப்படுத்தி வாழ்பவர்களுக்கு மத்தியில்

அதை ஒரு பெட்டிக்குள் அடைக்க முயல்பவன் கோமாளி...



பொருள்:

வாழ்க்கைகான பொருளை தேடும் போது

வாழ்வின் பொருளை இழக்கக்கூடாது...

- செவிவழி கேட்டது



மரணம்:

ஒருவர் மீதுள்ள அன்பை ஆயுதமாக பயன்படுத்தி

காரியத்தை சாதிக்கும் போது அங்கே

அவனின் உணர்வுகள் மரணிக்கிறது...



விளக்கம்:

புரிந்தவர்களுக்கு விளக்கம் தேவையில்லை

தெரிந்தவர்களுக்கு விளக்கத் தேவையில்லை...



ஆசான்:

ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு நாளும்

கற்பிக்கும் ஆசான் வாழ்க்கை.



அந்நியன்:

பணம் மதிக்கப்படும் இடத்தில்

மனம் ஒரு அந்நியன்...



வாழ்க்கை:

புரிந்து கொள்ளாத பத்து பேருக்காக வாழ்வதை விட

புரிந்து கொண்ட ஒருவருக்காக வாழ்வதே...



தனிமை:

பகுத்தரிய கற்றுக் கொடுத்தது

வாழ்க்கையையும் உண்மை உறவுகளையும்...



இயல்பு:

தனது இயல்பை மறைத்து மற்றவர்களுக்காகவே பேசினால்

ஒருநாள் அவர்களினால் அந்த இயல்பு மரணத்தை தழுவும்...

எழுதியவர் : Vijayaragavan (17-Jan-13, 12:42 pm)
சேர்த்தது : subathRAgavan
பார்வை : 112

மேலே