காற்றில் கையொப்பமிட்டேன்.
காற்றில் கையொப்பமிட்டு
காதல் தூது விட்டேன்
காட்டாறு வெள்ளம் போல்
நிற்காமல் ஓடிவிட்டாய்!
பூவை முத்தமிட்டு
போய் வா என்று சொன்னேன்
உதைபட்ட பூவும் வந்து
உன் உறவே வேண்டாம் என்றது!
நீயாவது சொல் என்று
நிலவிடம் உதவி கேட்டேன்
கன்னம் சிவந்தபடி
கைகூப்பி நின்றதடி நிலவு
உன் எண்ணம் விடும்படி
மன்றாடி கேட்குதடி!
தூது சென்ற காற்றும் பூவும் கூட
கைகோர்த்து கானம் பாடுதடி
பரஸ்பரம் காதல் தேடுதடி!
தேன்நிலவு போகவேண்டி
வான்நிலவும் லீவு கேட்டு
வாசலில் நிற்குதடி!
கல்நெஞ்சம் கொண்டே-என்னைக்
கவிழ்த்துவிட்டுப் போன பெண்ணே !
சொல் உந்தன் தந்தையிடம்-அவன்
பெரிய தவறு செய்தான் என்று!