உருக்கம்

பெற்ற அன்னையை காணவில்லை,
விற்ற தந்தையை காணவில்லை,
உடன் வந்தோரை காணவில்லை,
உற்றார் உறவினரை காணவில்லை,
எங்கே தொலைந்தேன் நான்? தனியே,
எங்கே போவேன் நான்? தெய்வமே,

மனம் உருகி வேண்டிகொண்டிருந்தது,
மாதா கோவிலில் மெழுகுதிரி!!!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 5:21 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 81

மேலே