காணவில்லை மழையை ...

உழவன் விதைத்து பயிரிட
உழுதிட்ட வயல்கள் விளைந்திட
அறுவடை செய்திட்ட நெல்லும்
பசியை போக்கிடும் அரிசியாகி
உயிர்கள் வாழ்ந்திட அன்னமாகி
உண்டவர்கள் உழைத்து முன்னேறி
அறிவுசார் ஆன்றோறாய் திகழந்திட
விந்தைகள் புரிய விஞ்ஞானிகளாய்
சாதனை படைக்க படைப்பாகளியாய்
உள்ளடக்கி நம் இந்தியா வல்லரசாய்
மாறிடும் காலம் விரைவில் நடந்திட
வண்டிக்கு அச்சாணி அவசியம் போல்
இத்தனயும் நடந்திட மூலகர்த்தாவாய்
பெய்திடும் மழையும் பொய்த்ததால்
நதிமகளும் நிலமகளும் அழுகின்றனர்
காணாத மழையைத் தேடுகின்றனர் !
வருந்திடும் உயிர்கள் மாய்கின்றன
மாற்று வழியையும் நாடுகின்றனர் !
பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (17-Jan-13, 10:16 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே